Saturday, June 13, 2009

மிகையான கூச்சம் (shyness)



மிகையான கூச்சம் (shyness)

இந்த மிகையான கூச்ச சுபாவத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் உங்களில் ஒருவராகவோ இல்லை உங்களை சார்ந்தவராகவோ நிச்சயம் பார்த்திருப்பீர்கள் .

இதனால் முன்பு மனம் பாதித்தவன் (இப்போ கொஞ்சம் மாறியிருந்தாலும் சில சமயங்களில் கட்டுப்படுத்த முடியவில்லை ) என்ற வகையில் , (பதிவிட முன் அனுபவம் இல்லாததால் தவறாக இருந்தாலும் என்னால் முடிந்த ) முதல் பதிவு இடுகிறேன் .

கூச்ச சுபாவம் உள்ளவர்களை மிக எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும் . உதாரணமாக :-

எப்போதும் தனிமையில் இருப்பது

புதியவர்களிடம் அணுகும் முறை

மற்றவர்கள் தன்னை கேலி செய்வார்கள் என்ற எண்ணம்

தன்னை தானே தரம் தாழ்த்தி நினைப்பது

முக்கியமாக பெண்களிடத்தில் பழகுவதற்கு தயக்கம்

மற்றும் இது போன்று பல குணங்கள் தென்படும்

இத்தனை ஒருவர் தானாக தெரிந்து கொண்டு தன்னை மாற்றிக்கொள்லா விட்டால் அவருடைய வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறி விடும் .

எனக்கு தெரிந்த மட்டும் வளர்ப்பு முறை மட்டுமே இதற்கு முக்கிய காரணம் . இந்த குணத்தை சிறு வயதிலேயே கிள்ளி எரிய வேண்டும் . குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் பேசவும் மற்றும் விளையாடவும் பெற்றோர்கள் கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும் . சிறு வயதில் இருந்தே அவர்களை வெளி உலகத்தை சிறிது சிறிதாக அறிமுகப்படுத்த வேண்டும் . பெற்றோர்களும் அவர்களிடத்தில் அடிக்கடிபொதுவான விஷயங்களிப்பற்றியோ இல்லை குடும்பத்தை பற்றியோ பேச வேண்டும் .

இது போன்ற சில பழக்கங்களை கடைபிடித்தாலே நம் குழந்தைகை இந்த கூச்ச சுபாவத்தில் இருந்து விடு படுவார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து .

இப்படிக்கு

பாதிக்கப்பட்டவன்

குட்டி வால் : இதுதான் என்னுடைய முதல் பதிவு மற்றும் எனக்கு எப்படி blog பண்ண வேண்டும் என்று கூட தெரியாது . அதனால் இந்த பதிவில் இருக்கிற தவறுகளையும் மற்றும் எப்படி பதிவிட வேண்டும் என்ற முறையையும் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன் .


நன்றி


6 comments:

  1. உங்கள் ஆரம்பம் அழகு. இணையம் தனிமனிதச் சொத்து அல்ல. அனைவருக்குமானது. உங்கள் பதிவை உரிமையோடு வெளியிடுங்கள். வாழ்த்துக்கள்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  2. ennai patri solli irukkiruthu intha pathivu,,

    good post keep it up

    ReplyDelete
  3. \\ஸ்ரீ.... said...

    உங்கள் ஆரம்பம் அழகு. இணையம் தனிமனிதச் சொத்து அல்ல. அனைவருக்குமானது. உங்கள் பதிவை உரிமையோடு வெளியிடுங்கள். வாழ்த்துக்கள்.\\



    நன்றி ஸ்ரீ என்னை உற்சாகப்படுத்தியதர்ற்கு மிக்க நன்றி. உங்களைப்போன்றோரின் பாராட்டுகளே என்னைப்போன்ற புதியவர்களுக்கு மேலும் எழுத தூண்டுகிறது

    ReplyDelete
  4. \\suresh said...

    ennai patri solli irukkiruthu intha pathivu,,

    good post keep it up\\

    நன்றி சுரேஷ்

    ReplyDelete
  5. புதிய தலைமுறை படித்து உங்களை தெரிந்து கொண்டேன்.......

    ReplyDelete