Wednesday, December 5, 2012

Ace2three என்கிற சூதாட்ட பணப்புடுங்கி

       Ace2three (fraud) என்கிற சூதாட்ட பணப்புடுங்கி

  நான் மற்றும் என்னைபோன்ற பலரை பாதித்த, மற்றும் இனி யாரும் இதனால் பாதிக்கப்படாமல் இருக்க ஒரு எச்சரிக்கை பதிவு. யாரும் இந்த    இது போன்ற online card games (ace2three fraud) சூதாட்டத்தை நம்பி ஏமாற வேண்டாம்.

                     பொழுதுபோக்காக ஒரு நாள் இந்த ஏமாற்றும் வெப்சைட் ல்(ace2three) இணைந்தேன் . அப்போதிருந்து ஆரம்பித்தது சனி. ஆரம்பத்தில் நன்றாக ஜெயித்தேன், இதனால் ஓரளவு நம்பிக்கை வந்து முதலில் 100 ருபாய் பணத்தை கட்டி ஆடினேன், ஆரம்பத்தில் நன்றாக ஜெயிக்க ஆரம்பிதேன் அதாவது சுமார் 3000 ருபாய் வரை . அதன் பிறகு படிப்படியாக தோற்க ஆரம்பிதேன், என்னை அறியாமலே நான் நான் போட்ட 100 ரூபாவையும் இழந்த பிறகு என்னையும் அறியாமல் அதில் மேலும் பணம் கட்டி ஆட ஆரம்பிதேன். இதுவரை சுமார் 3500 ருபாய் எனது பணத்தை தோற்று விட்டு எனது பேங்க் பலன்சே ஐ பார்த்து மிரண்டு போய் விட்டேன். அப்போதுதான் புரிந்தது அந்த நாய்கள் என்னை நன்றாக ஏமாற்றி விட்டார்கள் என்பது .

                               அவர்கள் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்றால் முதலில் நம்மை ஜெயிக்க வைத்து பிறகு நம்மிடம் இருந்து பணத்தை பிடுங்குகிறார்கள், (ஆசை காட்டி மோசம் செய்யரதுன்னுவான்களே அது இதாங்க) அதுவும் நம்மை கிட்டத்தட்ட அதற்கு அடிமையாக்கி விடுகிறார்கள் . அவர்கள் எப்படி மோசடி செய்கிறார்கள் என்று பிறகுதான் புரிந்தது. 6 பேர் ஆடக்கூடிய ஆட்டத்தில் 4 பேர் என்னைப்போல ஏமாளிகள் மற்றும் அவர்களுடய ஆட்கள் 2 பேர் இது போதாதா அவர்கள் நம்மை ஏமாற்ற. இன்னொன்று நமக்கு வரும் கார்ட்களையும் அந்த நாய்களே கட்டுப்படுத்துகிறார்கள்.
அதனால நா சொல்ல வர்றது என்னன்னா யாரும் இந்த (ace2three) நாய்ங்க வெப்சைட் கு போகாதீங்க

என்ன மாதிரி ஏமாந்தவங்க போட்ட லின்க்ஸ்



http://www.mouthshut.com/websites/Ace2three-com-reviews-925615466

http://www.complaintsboard.com/complaints/ace2threecom-c406358.html

http://www.complaintboard.in/complaints-reviews/ace2three-l132638.html

http://www.consumercomplaints.in/complaints/ace2three-hyderabad-andhra-pradesh-c566915.html






  இந்த சைட் (ace2three)  மட்டும் இல்ல இது மாதிரி நெறைய பேர் ஏமாத்த வந்துட்டே இருப்பாங்க, ஆனா நாமதான் கொஞ்சம் உஷாரா இருக்கணும். யாரும் எந்த   online games       நம்பி ஏமாற வேணாம் (என்ன மாதிரி யாரும் ஏமாற வேணாம்)


















Saturday, June 20, 2009

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்


தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

பாடலாசிரியர் வைரமுத்து கூட,

நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நீ பந்தி
நான் தொந்தி
என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.

அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.

தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.

என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.

ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!

ஜெய் தொந்தி!

(மெயிலில் சுட்டது )

Tuesday, June 16, 2009

முப்பரிமான சாலை வரைகலை (3D Road Drawing)

எனக்கு வந்த மெயிலில் நான் ரசித்தவை

(ரொம்ப நேரம் திங்க் பண்ணி பார்த்தும் ஒரு subject ம் கெடைக்கல அதான் )



















மறக்காதீர்கள் மறந்தும் இருந்து விடாதீர்கள் நமது சின்னம்....